Sports
நான் தவறுதலாக வாங்கப்பட்ட வீரர் அல்ல, கட்டாயம் வாங்கவேண்டிய வீரர் : சினிமாவை விஞ்சிய IPL ஹீரோ !
ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர். ஏலத்தின் போது சர்வதேச போட்டிகளை ஆடாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அப்போது இந்திய வீரரான ஷஷாங்க் சிங் என்பவரின் பெயரை ஏலம் நடத்தும் மல்லிகா சாகர் உச்சரித்தார்.
அவரை அடிப்படை விலையான ரூ.10 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக ஏலதாரர் மல்லிகா அறிவித்தார். ஆனால், அப்போது தான் தாங்கள் தவறான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்த விவரம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தெரியவந்தது.
அதாவது 19 வயதான ஷஷாங்க் சிங் என்பவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. அதன் படி ஷஷாங்க் சிங் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால், அதன் பின்னரே அவர் 32 வயதுடைய மற்றொரு ஷஷாங்க் சிங் என்பது தெரியவந்துள்ளது.
இதனை உடனடியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலதாரர் மல்லிகாவிடம் கூறினாலும், ஒருமுறை ஏலத்தில் எடுத்துவிட்டால் அதனை மாற்றமுடியாது என்ற விதிமுறையை கூறி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார். இந்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பை பெற்ற ஷஷாங்க் சிங் அதிரடியாக ஆடி 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போதே அவர் ஆட்டம் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவர் பஞ்சாப் அணிக்காக போட்டியை வென்று கொடுத்ததோடு ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய பஞ்சாப் அணி 70-4 என்ற கணக்கில் தத்தளித்தது.
அப்போது ஒரு முனையில் சிறப்பாக ஆடிய ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அவரின் இந்த அதிரடி காரணமாக ஒரு பந்து மீதம் இருக்கும் நிலையில், 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி திரில் வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!