Sports
பஞ்சாப் அணியால் தவறுதலாக வாங்கப்பட்ட வீரர் : இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடி அசத்தல் : விவரம் என்ன ?
ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இந்த ஏலத்தில் 10 அணிகளை சேர்ந்த உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்துகொண்டனர். ஏலத்தின் போது சர்வதேச போட்டிகளை ஆடாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அப்போது இந்திய வீரரான ஷஷாங்க் சிங் என்பவரின் பெயரை ஏலம் நடத்தும் மல்லிகா சாகர் உச்சரித்தார்.
அவரை அடிப்படை விலையான ரூ.10 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக ஏலதாரர் மல்லிகா அறிவித்தார். ஆனால், அப்போது தான் தாங்கள் தவறான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்த விவரம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தெரியவந்தது.
அதாவது 19 வயதான ஷஷாங்க் சிங் என்பவரை ஏலம் எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்துள்ளது. அதன் படி ஷஷாங்க் சிங் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும் அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால், அதன் பின்னரே அவர் 32 வயதுடைய மற்றொரு ஷஷாங்க் சிங் என்பது தெரியவந்துள்ளது.
இதனை உடனடியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலதாரர் மல்லிகாவிடம் கூறினாலும், ஒருமுறை ஏலத்தில் எடுத்துவிட்டால் அதனை மாற்றமுடியாது என்ற விதிமுறையை கூறி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார். இந்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய அவர் ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக ஆடி 1 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தவறுதலாக வாங்கப்பட்ட வீரர் பஞ்சாப் அணிக்கு அபாரமாக செயல்பட்டதை குறிப்பிட்டு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். எனினும் இந்த போட்டியில் பெங்களுரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?