Sports
சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட RCB-யின் புதிய ஜெர்ஸி : அறிமுகப்படுத்திய விராட் கோலி, டு பிளேஸிஸ் !
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை இறுதிப்பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளது...
இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், 2024 ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய பச்சை நிற ஜெர்சி அறிமுக விழா நடைபெற்றது...
இதில் அந்த அணியின் கேப்டன் டூப்ளசிஸ், விராட் கோலி, முகமது சிராஜ், தினேஷ் கார்த்தி, மேக்ஸ்வெல் மற்றும் ரஜத் பட்டிதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பச்சை நிற ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. ஆர்சிபி அணி வழக்கமாக பெங்களூருவில் நடக்கும் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும் என்பதும், சுற்றுசுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த பச்சை நிற ஜெர்சி அணியப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!