Sports
"ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது" - ஷ்ரேயாஸ்க்கு சுனில் கவாஸ்கர் ஆதரவு !
ஒரு காலத்தில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடி வரும் வீரர்களே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், இந்திய அணியில் ஆடும் நட்சத்திர வீரர்களும் ரஞ்சி கோப்பையில் ஆடாமல் புறக்கணித்தனர். சமீப காலத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது .
அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களை தவிர அனைவரும் ரஞ்சி அணியில் ஆடவேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவிட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் விலகினார்.
ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு அவரின் உடல்நிலை சரியாக உள்ளது என தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மருத்துவ பிரிவு தலைவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் ஆடாமல் தவிர்க்கவே ஷ்ரேயாஸ் முதுகு பிடிப்பு என்று கூறினார் என சர்ச்சைகள் எழுந்தது.
அதன் பின்னர் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது கடினம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உண்மையாக ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி தொடரின் காலிறுதியில் விளையாடவில்லை என்பது உண்மை தான். அவர் இங்கிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் முதுகு வலியால் தம்மால் விளையாட முடியாது என்பதை நிர்வாகத்திடம் கூறிவிட்ட பின்னர், அவர் ஃபிட்டாகி விளையாட தயாராக இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடெமி கூறியுள்ளது. இது அவருக்கு எதிராக நடந்ததை போலவே இருக்கிறது.
உண்மையில், ஒருவரின் வலியை எந்த பயிற்சியாளராலும் மதிப்பிட முடியாது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாகவும் அவர் இந்திய அணி நிர்வாகத்தின் கோரிக்கையால் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்கு எப்போதும் மறுப்பு தெரிவித்ததாக தெரியவில்லை. ஆனாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!