Sports
"உங்களால் பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள்" - BCCI-க்கு ஷர்துல் தாகூர் எச்சரிக்கை !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ரஞ்சி கோப்பை போட்டிக்கான முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்து வருவதாகவும் விமரிசனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐ-யின் முடிவால் நாட்டில் உள்ள பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள் என இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " ரஞ்சிக் கோப்பையில் நான் விளையாடத் துவங்கிய போது முதல் 3 போட்டிக்கு 3 நாட்கள் இடைவெளி இருக்கும். அதே போல சில போட்டிகளுக்கு 4 நாட்கள் இடைவெளியும் இருக்கும்.
தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளுக்கு 5 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால், இப்போது அந்த இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு போட்டியும் 3 நாட்கள் இடைவெளியில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி வரை செல்லும் அணி இப்படி 3 நாட்கள் இடைவெளியில் 10 போட்டியில் விளையாடுவது என்பது மிகவும் கடினமான காரியம்.
இப்படி தொடர்ந்து போட்டிகள் வருவதால் எங்கள் அணியில் கூட வீரர்கள் காயமடைந்துள்ளனர். எனவே அடுத்த வருடம் அதிக இடைவெளி இருக்கும் அளவுக்கு அட்டவணையை பிசிசிஐ வடிவமைக்க வேண்டும். நம்முடைய வீரர்கள் இப்படி தொடர்ந்து ஓரிரு வருடங்கள் இடைவெளியின்றி விளையாடினால் பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!