Sports
மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா : முக்கிய MI வீரரை வாங்கிய RCB !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதில் மேலும் அதிக வருவாய் ஈட்டவேண்டும் என கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்து வருகிறார். எனினும் கடந்த ஆண்டு அவருக்கும் குஜராத் அணி நிர்வாகத்துக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அவர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்புவார் என்றும் பேசப்பட்டது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று குஜராத் டைட்டன்ஸ் சார்பில் ஹர்திக் பாண்டியா தக்கவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில், ஹர்திக் பாண்டியா வீரர்கள் பரிமாற்ற முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே நேரம் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர், காமரூன் க்ரீன் பெங்களூரு அணிக்கு வீரர்கள் பரிமாற்ற முறையில் வாங்கப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
த.வெ.க அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி : நடந்தது என்ன?
-
ஆளத் தெரியாதவருக்கு தலைமைச் செயலகம் எதற்கு? : முதலமைச்சர் விஜயை சாடிய முரசொலி!
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!