Sports
இர்பான் பதான் அப்படி செய்தது சரியல்ல, இந்தியா தோற்றால் நானும் அதை செய்வேன் - பாக். வீரர் கருத்து !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு பின்னர் மைதானத்தில் கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இர்பான் பதான் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் உடன் இணைந்து நடனம் ஆடினார். இர்பான் பதானின் இந்த செயல் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதோடு நிற்காத அவர், அடுத்து ஆப்கானிஸ்தான் வெல்லும் போதும் நடனமாடுவேன் என்று இர்பான் பதான் கூறினார். அதே போல ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வென்ற பொழுது வர்ணனை அறையில் இருந்தே நடனம் ஆடினார்.
இந்த நிலையில், இர்பான் பதானின் செயலை பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொஹம்மது அமீர் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " வர்ணனையாளர் பணியில் இருக்கும் ஒருவர் ஒரு அணிக்கு சாதகமாக இருக்கக்கூடாது. இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் அணி இன்னொரு முறை எதிர்கொண்டு அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோற்றபிறகு இர்பான் பதான் நடனமாடியதைப் போல நானும் ஆடுவேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் 33 வீரர்கள் : ரூ.43.20 லட்சம் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!