விளையாட்டு

"அவர் பந்துவீச்சில் பேட்ஸ்மென்கள் அதிர்ந்து போகின்றனர்"- மொஹம்மது ஷமியை பாராட்டும் முன்னாள் வீரர்கள் !

இந்திய அணி பந்துவீச்சாளர் மொஹம்மது ஷமியை பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர்.

"அவர் பந்துவீச்சில் பேட்ஸ்மென்கள் அதிர்ந்து போகின்றனர்"-  மொஹம்மது ஷமியை பாராட்டும் முன்னாள் வீரர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.

பின்னர் இந்தியா நிர்ணயித்த 358 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இறுதியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது.

"அவர் பந்துவீச்சில் பேட்ஸ்மென்கள் அதிர்ந்து போகின்றனர்"-  மொஹம்மது ஷமியை பாராட்டும் முன்னாள் வீரர்கள் !

இந்திய அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 5 விக்கெட்களையும், , முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றி மற்றும் ஆதிக்கத்தை பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்களும் வியந்து பாராட்டி வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளார் ஷோயப் அக்தர், "இந்தியா தற்போது வெறித்தனமாக ஆடும் அணியாக மாறியுள்ளது. ஷமி நல்ல ஃபார்மில் வந்துவிட்டார் என்பதற்காக. மூன்று போட்டிகளில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பதினான்கு உலகக் கோப்பை போட்டிகளில் 45 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார்" என்று கூறினார்.

அதே போல, பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறுகையில், "ஷமி ஆட்டத்தில் நுழைந்த உடனேயே சீம் பவுலிங் செய்ய தொடங்கி விடுகிறார். பந்தை உள்ளேயும் வெளியேயும் வேகமாக சுழற்றுவதில் கைதேர்ந்துள்ளார். அவரது பந்துவீச்சு பும்ராவின் பந்துவீச்சிலிருந்து வித்தியாசமானது. அவரது பந்துகளில் பேட்ஸ்மென்கள் அதிர்ந்து போய்விடுகின்றனர்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories