Sports
புள்ளிப்பட்டியலில் முதலிடம் : அசத்தும் இந்தியா அணி.. தொடரில் தோற்காத ஒரே அணியாக ஆதிக்கம் !
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமாக ஆடிவரும் இந்திய அணியும், நியூஸிலாந்து அணியும் நேற்று தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் கான்வே ரன் எடுக்காமலும், வில் யங் 17 ரன்கலுகிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, டாரில் மிச்சேல் இணை அபார ஆட்டம் ஆடினர்.
ரச்சின் ரவீந்திரா 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த டாரில் மிச்சேல் 130 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை வழங்கியது. ரோகித் 46 ரன்களுக்கும், கில், 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களுக்கும், கே.எல் ராகுல் 27 ரன் களும் குவித்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ரன் அவுட்டாக ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது.
எனினும் இறுதிகட்டத்தில் ஜோடி சேர்ந்த ஜடேஜா, கோலி ஜோடி அபாரமாக ஆடியது. இறுதிக்கட்டத்தில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ஜடேஜா 39 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் இந்திய அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
Also Read
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!