Sports

பாகிஸ்தான் ரசிகர்களை சீண்டிய MAKE MY TRIP : விமர்சிக்கும் ரசிகர்கள் - முழு விவரம் என்ன ?

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முக்கிய போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் 'நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்' நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்களை நோக்கி குஜராத் ரசிகர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமெழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது 'மேக் மை ட்ரிப்' நிறுவனம் பாகிஸ்தான் ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமான வெளியிடப்பட்ட விளம்பரம் பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது. பயண ஏற்பாடுகளை செய்யும் நிறுவனமான மேக் மை ட்ரிப் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, ஆங்கில நாளிதழின் ஆமதாபாத் பதிப்பில் ஒரு முழு பக்க விளம்பரத்தைக் கொடுத்திருந்தது.

அதில் பாகிஸ்தான் அணி எத்தனை ரன்கள், அல்லது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கிறதோ அத்தனை எண்களுக்கு கூப்பன் கோட் அடிப்படையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. எந்த அணி ரசிகரும் தான் சார்ந்திருக்கும் அணி வெற்றிபெறும் என்றுதான் ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சீண்டும் விதமாக இதுபோன்ற விளம்பரத்தை வெளியிட்ட அந்த நிறுவனத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: INDvsPAK : மதவாத கோஷம்.. விளையாட்டிலும் குஜராத் தமிழ்நாட்டை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது !