Sports
உலககோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுடனான தொடர் இந்தியாவுக்கு எதற்கு ? - பாக். வீரர் வாசிம் அக்ரம் கேள்வி !
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி, 6.1 ஓவரிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 8-வது முறையாக ஆசியக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த தொடருக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதே போல ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்த நிலையில், இந்தியாவை சந்திக்கவுள்ளது.
இந்த தொடர் முடிந்ததும் அக்டோபர் 5-ம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளதால் இந்த ஆஸ்திரேலிய தொடர் இந்தியாவுக்கு சரியான பயிற்சி தொடராக இருக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம் இந்திய அணி வீரர்கள் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து ஆடி வருவது விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்தியா ஆஸ்திரேலியாவுடன் விளையாடுவது வீரர்களுக்கு கூடுதல் சோர்வை தரும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஆகஸ்ட்டில் இருந்து இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறது. உலகக்கோப்பைக்கும் ஆஸ்திரேலிய தொடருக்கும் இடையே இந்திய வீரர்களுக்கு சிறிது நேரமே ஓய்வு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதனால் உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்த தொடர் தேவையற்றது. இது வீரர்களுக்கு கூடுதல் சோர்வை மட்டுமே தரும். உலகக்கோப்பை ஆட்டங்களில் விளையாட இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யவேண்டியுள்ளது. இதற்கு ஒருநாளை இந்திய வீரர்கள் செலவிட வேண்டியிருக்கும். இப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது ஏன் எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!