Sports
மீண்டும் சொதப்பிய பேட்டிங் ஆர்டர்.. 7 ஆண்டுகளில் இல்லாத மோசமான சாதனையை படைத்த இந்திய அணி !
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இதன் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வென்றது.
அதனை தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. பின்னர்ட் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து வந்தது. சுப்மன் கில் 7 ரன்களுக்கும், இஷான் கிஷன் 27 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னுக்கும், சஞ்சு சாம்சன் 7 ரன்னுக்கும் ஆட்டம் இழந்தனர்.
எனினும் திலக் வர்மா 41 பந்துகளில் 51 ரன்கள் குவிக்க ஒருவழியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும், பின்னர் பூரான், ஹெட்மையர் ஆகியோரின் ஆட்டம் காரணமாக வெற்றியை நோக்கி நெருங்கியது.
ஆனால், சாஹலின் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்டத்தில், அகீல், அல்சரி ஜோசப் அபாரமாக ஆடி அந்த அணிக்கு வெற்றித்தேடி தந்தனர். இதனால் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் இந்திய அணி தொடர்ந்து 2 டி 20 போட்டிகளை தோற்றதேயில்லை என்ற நிலை இருந்த நிலையில், இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடந்த 7 ஆண்டுகளில் சந்திக்காத மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!