Sports
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை நொறுக்கி தொடரின் முதல் வெற்றியை பெற்ற இந்தியா.. முழு விவரம் என்ன ?
விளையாட்டுக்கு புகழ் பெற்ற சென்னையில் பல ஆண்டுகளாக கிரிக்கெட் தவிர பிற முக்கிய சர்வதேச போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்றதும் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முயற்சியால் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக பல்வேறு நாடுகளின் வீரர்கள் சென்னை வந்த நிலையில், முதல் போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். நடப்பு சாம்பியன் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் தென் கொரியா அணி 2-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.
அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், மலேசிய அணி பாகிஸ்தான் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. இறுதியாக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி சீன அணியை சந்தித்தது. இந்த போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். இறுதியில் இந்திய அணி 7-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!