Sports

FIFA மகளிர் உலகக்கோப்பை.. அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி, இத்தாலி.. வெளியேறிய முக்கிய அணிகள் என்ன ?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து தற்போது FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. அதன் லீக் போட்டிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், முக்கிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

A பிரிவில் இருந்து போட்டியை நடத்தும் நாடான நியூஸிலாந்து வெளியேறிய நிலையில், B பிரிவில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் கனடா தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த பிரிவில் தரவரிசையில் 40-வது இடத்தில் இருக்கும் நைஜீரியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதே போல E பிரிவில் போர்த்துக்கல் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அதே நேரம் F பிரிவில் இருந்து தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் பிரேசில் அணி வெளியேறியுள்ளது. ஆனால், G பிரிவில் முன்னணி அணியான இத்தாலி அணியும், அர்ஜென்டினா அணியும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

மேலும், H பிரிவில் இரண்டு முறை FIFA உலக சாம்பியனும் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அணியான ஜெர்மனி தொடரில் இருந்து வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பிரிவில் கொலம்பியா மற்றும் மொராக்கோ அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Also Read: சதம் அடித்தும் வாய்ப்பு கொடுக்காத BCCI.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய அணி வீரர் !