Sports
மூத்த வீரர்களுக்கு ஓய்வு.. மீண்டும் சிதைந்த நடுவரிசை.. இந்திய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி !
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென பெய்த மழை காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியை தலைமை தாங்கினார்.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்ல இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன், கில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இஷான் கிஷான் 55 ரன்களுக்கும், சுப்மன் கில் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், இந்திய நடுவரிசை வீரர்கள் கடுமையாக சொதப்பியதால் இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் (63 )மற்றும் கார்ட்டி (48 ) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!