Sports
நேரடியாக காலிறுதியில் களமிறங்கும் இந்திய அணிகள்.. வெளியானது ஆசிய விளையாட்டு போட்டி அட்டவணை !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது.
ஏனெனில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனாவில் வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்திய அணி கலந்துகொண்டால் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பும் இந்திய அணிக்கு உள்ளது.
இதனால் இதில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால் ,அந்த நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ஆடவர் அணியின் பங்கேற்பு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிசிசிஐ-யின் உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியை அனுப்ப முடிவு செய்யப்பட்டு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் அடிப்படையில், இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய ஆடவர் அணி காலிறுதி போட்டியில் தகுதி பெரும் அணியோடு அக்டோபர் 5ஆம் தேதி மோதவுள்ளது. அதே போல இந்திய மகளிர் அணி செப்டம்பர் 19ஆம் தேதி தனது முதல் போட்டியை சந்திக்கிறது. ஆடவர் அணி காலிறுதியில் வென்றால் அடுத்த நாளே அரையிறுதி போட்டியும், அதற்கு அடுத்த நாள் இறுதிப்போட்டியும் நடைபெறும். ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் கிரிக்கெட்டில் 14 அணிகளும், ஆடவர் கிரிக்கெட்டில் 18 அணிகளும் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?