விளையாட்டு

WEST INDIES அணியை வென்றாலும் இரண்டாம் இடம்தான்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் பாகிஸ்தான் !

சமீபத்தில் வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது.

WEST INDIES அணியை வென்றாலும் இரண்டாம் இடம்தான்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் பாகிஸ்தான் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அபாரமான பந்துவீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் மற்றும் அறிமுக வீரர் ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பான விளையாடினர். இதில் அனுபவ வீரர் போல தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.மேலும், கேப்டன் ரோகித்சர்மாவும் சதம் விளாசி அசத்தினர்.

இவர்களில் இந்த அபார ஆட்டம் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் குவித்தது. பின்னர் தனது இரண்டாம் இன்னிங்க்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வினின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடிய இந்தியா, முதல் இன்னிங்சில் 438 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்களும், ரோகித் சர்மா 89 ரன்களும் குவித்தனர். பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பிராத்வெய்ட் 75 ரன்கள் சேர்க்க, சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.

WEST INDIES அணியை வென்றாலும் இரண்டாம் இடம்தான்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் பாகிஸ்தான் !

பின்னர் ஆடிய இந்திய அணி, 118 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்ததால் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.அதன் பின்னர் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 5-வது நாள் முழுக்க மழை பெய்த காரணத்தால் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது.

இந்த தொடரை 1-0 என வென்றாலும், சமீபத்தில் வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. அதே நேரம் இலங்கை அணிக்கு எதிரான தொடரை 2-0 என்று வென்ற பாகிஸ்தான் அணி 100% வெற்றியுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது .

அதே நேரம் இந்திய அணி,ஒரு வெற்றி மற்றும் ஒரு டிரா என 66.67 சதவீத புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளது. 54.17 சதவீதத்துடன் ஆஸ்திரேலிய அரசு 3-ம் இடத்திலும், 29.17 சதவீதத்துடன் இங்கிலாந்து அணி நான்காம் இடத்திலும் உள்ளது.

banner

Related Stories

Related Stories