Sports
"இவர்களை வைத்து மட்டும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது" -ஹர்பஜன் சிங் கூறியது என்ன ?
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
இந்நிலையில் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கடைசியாக ஐசிசி கோப்பையை வென்று 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அதோடு உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இறுதியாக இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பையை இந்தியா வென்ற நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறவுள்ளதால் இந்த முறை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி சில வீரர்களை வைத்து மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல முடியாது என இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், "இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்தியா போன்றதிறமையான வீரர்கள் இருந்தாலும் இவர்களை வைத்து மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல முடியாது. அணியின் பிற வீரர்களும் சிறப்பாக ஆடவேண்டும்.
வீரர்களும், அணி நிர்வாகமும் ஒரே நோக்கில் செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். சிறிய விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். ரன்னை கட்டுப்படுத்துதல், ரன் அவுட் ஆக்குதல், கேட்ச் மிஸ் செய்வதை தவிர்க்க வேண்டும். இது போன்ற செயல்களை செய்வது பெரிய முடிவைத் தரும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!