Sports
ஆத்திரத்தில் ஸ்டம்பை பேட்டால் தாக்கிய இந்திய அணி கேப்டன்.. வங்கதேச தொடரில் அதிர்ச்சி.. நடந்தது என்ன ?
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு டி20 தொடர் மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி கைப்பற்றியது.
பின்னர் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. எனினும் அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் இந்திய அணியின் இந்த தோல்வி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றிபெற்றது. எனினும் சுதாரித்த இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி முதலில் சிறப்பாக ஆடினாலும் இறுதி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. அந்த ஓவரில் இரண்டு ரன்களை எடுத்த இந்திய அணி வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், விக்கெட்டை இழந்து ஆல் அவுட்டானது. இதனால் போட்டி சமனில் முடிய ஒரு நாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு நடுவர் எல்.பி முறையில் ஆட்டமிழந்ததாக கூறினார். ஆனால், நடுவரின் இந்த முடிவால் ஆத்திரம் அடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டம்பை பேட்டால் தாக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!