Sports
RCB-யின் சாதனையை 1 ரன்னில் தவறவிட்ட Knight Riders அணி.. அமெரிக்காவிலும் கெத்து காட்டும் MI அணி !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள 'மேஜர் லீக் கிரிக்கெட் டி20' என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது.
இந்த தொடர் தற்போது தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், MI நியூயார்க் அணி, லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய MI நியூயார்க் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் குவித்தது. அந்த அணியில் டிம் டேவிட் 21 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 48 ரன்களை விளாசி அசத்தினார்.
பின்னர் ஆடிய லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி, MI நியூயார்க் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி வெறும் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் MI நியூயார்க் அணி, 105 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் மற்றொரு அணியான லாஸ் ஏஞ்சலஸ் நைட் ரைடர்ஸ் அணி 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததை குறிப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!