Sports
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை - தோனி குறித்து சஹால் கூறியது என்ன ?
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது என இந்திய அணி வீரர் சஹால் கூறியுள்ளார். நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் தோனி குறித்து பேசிய அவர், நான் தோனியின் மிகத் தீவிர ரசிகன். இந்திய அணியில் தோனியுடன் விளையாடிய போது, அவர் எனக்கு நிறைய ஆலோசனைகளை கொடுத்துள்ளார். அதனை நான் கண்களை மூடிக் கொண்டு செயல்படுத்துவேன்.
அவருக்கு கிரிக்கெட்டில் அனைத்தும் தெரியும், இதனால் ஆட்டத்தை அவர் எளிதாக கணித்துவிடுமார், அவரைப் போல ஆட்டத்தை யாராலும் கணிக்க முடியாது.ஐபிஎல் தொடரில் தோனி கேப்டன்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அது நிறைவேறுமா என தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!