Sports
பல மடங்கு அதிகரித்த IPL-ன் மதிப்பு.. முதலிடத்தில் CSK.. RCB, MI அணிகளில் மொத்த மதிப்பு என்ன தெரியுமா ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.
ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையான கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக வலம்வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாக அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் ரூ.51062 கோடியாக கணக்கிடப்பட்ட நிலையில், அது தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 1,3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஹூலைஹன் லோக்கே முதலீட்டு வங்கியின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாகவும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1606 கோடியாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1564 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1490 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!