Sports
"தோனி தனித்து தெரிய இதுதான் காரணம்,, அதை உணர்ந்ததும் அசந்து விட்டேன்" -இளம்வீரர் வெங்கடேஷ் ஐயர் வியப்பு !
இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.
அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தனித்துவமான தலைமைப்பன்பாலேயே இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பைகளை குவித்ததாக பல்வேறு வீரர்களும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தோனி போல இயல்பாக யாரும் இல்லாததுதான் அவரை தனித்து காட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது என இளம்வீரர் வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில், நான் ஆடிக்கொண்டிருந்தபோது தோனி ஒரு ஃபீல்டரை அழைத்து மறுபக்கம் நிற்க வைத்தார். அப்போது, என்னுடன் விளையாடியவர் மிகச் சரியாக அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.. அதே போல நானும் ஒரு முறை தவறான திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தவருடம் ஆட்டமிழந்தேன். இதற்கு காரணமாக தோனியின் திறந்தான்.
அப்போது நான் யோசித்தது என்ன என்றால்? எப்படி உடனே குறிப்பிட்ட அதே பந்தில் அந்த வேலையை அவர் செய்கிறார் என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன். இங்கு பல ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும் தோனி போல இயல்பாக யாரும் இல்லாததுதான் அவரை தனித்து காட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
த.வெ.க.வின் நாடகத்தால் நடைபெறும் இடைத்தேர்தல் - தக்க பாடம் புகட்டும் முனைப்பில் மக்கள்!
-
நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; சமரசமின்றி போராடுவோம்: #BanNEET இயக்கத்திற்கு மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
-
#BANNEET என்னும் இலக்குடன் ‘கையெழுத்து இயக்கம்’ தொடக்கம்! - உயிர்க்கொல்லியை நீக்க மாபெரும் முன்னெடுப்பு!
-
ஏழைகளுக்காக ரூ.1 இட்லி... பாட்டி கமலாயிக்கு நிறுத்தப்பட்ட இலவச சிலிண்டர்: வேடிக்கை பார்க்கிறதா தவெக அரசு?
-
சினிமாவை மிஞ்சிய தங்கக் கடத்தல் : சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? சிக்கியது எப்படி?