Sports
"தோனிக்காக இந்த பெரும் வாய்ப்புகளை நிராகரித்தேன்" -ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்ற ரெய்னா !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.
இதில் சென்னை அணியும் மும்பை அணியும் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதோடு சென்னை அணி இரண்டு முறை தவிர அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று சாதனை படைத்துள்ளது. இப்படி சென்னை அணியின் சாதனைக்கு முக்கிய காரணமாக சுரேஷ் ரெய்னா இருந்தார். இதனால் அவரை சின்ன தல என்றே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு அவர் சென்னை அணியால் மீண்டும் ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தார். இந்த நிலையில், நான் தோனிக்காக பல அணிகளிலிருந்து வந்த கேப்டன் வாய்ப்புகளை நிராகரித்தேன் என் ரெய்னா கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரெய்னா, “நான் உத்தரப் பிரதேசம் மற்றும் CSK அணிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் ஆடியபோது பல அணிகள் என்னை கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடுவதற்கு அழைத்தன. ஆனால் நான் அந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை. தோனி என்னிடம் எப்பொழுதும் 'நான் கேப்டன், நீ துணைக் கேப்டன். நீ எங்கும் செல்லக்கூடாது' என்று சொன்னார். அதனால் நான் அந்த வாய்ப்புகளை நிராகரித்தேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!