Sports
"இந்தியா முழுக்க ரன்கள் குவித்த சர்ஃப்ராஸ் கானால் அதனை செய்யமுடியாதா" -கங்குலி ஆவேசம் !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. நடப்பு ரஞ்சி தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சர்ஃப்ராஸ் கானின் சராசரி 107.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83. இது கிரிக்கெட்டின் ஆகப்பெரும் ஜாம்பவான்களே தொடமுடியாத இடம்.
ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் கூட சர்ஃப்ராஸ் கானுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை. இதனைக் குறிப்பிட்டு பல்வேறு தரப்பினர் தேர்வு குழுவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது என முன்னாள் இந்திய வீரர் கங்குலி கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பை போன்ற போட்டிகளில் ஜெய்ஸ்வால் ஏராளமான ரன்களைக் குவித்துள்ள நிலையில், அவர் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் சரியான தேர்வுதான். ஆனால் சர்ஃப்ராஸ் கான் தேர்வு செய்யப்படாதது வருத்தமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக ஆடும் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். சர்ஃபராஸ் கானுக்கு வேகப்பந்தை எதிர்கொள்வதில் பிரச்னை இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையாக இருந்தால் இந்தியா முழுக்க அனைத்து மைதானங்களிலும் அவரால் ரன்கள் சேர்த்திருக்க முடியாது. அதனால் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!