Sports
அமெரிக்காவில் CSK அணி.. வீரராக களமிறங்கும் பிராவோ.. ஓய்வில் இருந்து திரும்பும் ராயுடு.. முழு விவரம் என்ன?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்தது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கி 6 அணிகளையும் வாங்கின. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. அங்கு நடைபெறவுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் டி20" என்ற டி20 லீக் போட்டியில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (TSK) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு CSK அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், CSK அணியின் பெரும்பாலான வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். CSK அணியின் வீரர்களான டெவான் கான்வே, மிட்சல் சாண்ட்னர் அம்பத்தி ராயுடு மற்றும் CSK அணியில் பயிற்சியாளராக இருக்கும் பிராவோ வீரராக அணியில் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி மினி CSK அணியாக காட்சியளிப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!