Sports
Instagram பக்கத்தில் மதரீதியிலான பதிவு.. கொதித்தெழுந்த ரசிகர்கள்.. பகிரங்கமாக மன்னிப்பு கோரிய IPL வீரர்!
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் குஜராத் அணியை ரஷித் கான் தலைமை தாங்கினார். இந்த போட்டியில் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்கள் குர்பாஸ் 15 ரனகளிலும் , ஜெகதீசன் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 40 பந்தில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது 4 ஓவருக்கு 50 ரன்களே தேவைப்பட்டது. ஆனால், அடுத்த ஓவரை வீசிய கேப்டன் ரஷீத் கான் அதிரடி வீரர் ரசல், நரைன், ஷர்துல் தாகூரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை பதிவு செய்தார்.
இதில் இருந்து கொல்கத்தா அணி தோல்வியை தழுவுவது நிச்சயம் என்ற நிலை ஏற்பட்டது. அதோடு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில், 19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
அந்த போட்டியின் பின்னர் யாஷ் தயாள் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார். அதோடு காய்ச்சலால் உடல்நிலை மோசமாகி சில வாரங்கள் ஓய்வில் இருந்து சில போட்டிகளை தவிரவிட்டார். இந்த நிலையில், அவர் தற்போது மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கொலை செய்வது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு லவ் ஜிகாத் என்று வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிமன்னிக்கவும்.. அந்தப் புகைப்படத்தை தவறுதலாக பதிவிட்டுவிட்டேன்.. வெறுப்பை பரப்ப வேண்டாம்.. அனைத்து மதம் மற்றும் சமூகம் மீதும் எனக்கு மரியாதை இருக்கிறது என்று யாஷ் தயாள் பதிவிட்டுள்ளார். எனினும் அவரை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!