Sports
பாதியிலேயே விலகிய வீரர்.. அதிரடியாக சம்பளத்தில் கை வைத்த CSK நிர்வாகம்.. பின்னணி என்ன ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், ஐபிஎல் மினி ஈழத்தில் சென்னை அணி பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால் சென்னை அணிக்காக பென் ஸ்டோக்ஸ் முதல் இரு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். அதன்பின் நடந்த நான்கு ஆட்டங்களை காயம் காரணமாக அவர் தவறவிட்டார். மேலும், வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்துக்கு விரைவில் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து சென்றுள்ளார்.
முழு தொடரிலும் பென் ஸ்டோக்ஸ் ஆடாத நிலையில், அவருக்கு வழங்கப்படவுள்ள சம்பளத்தை குறைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 16.25 கோடி ரூபாய்க்கு பென் ஸ்டோக்ஸ் வாங்கப்பட்ட நிலையில், அதில் 20% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது மொத்த சம்பளத்தில் 2.78 கோடி ரூபாயை அவர் இழப்பார் என்ற கூறப்படுகிறது.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !