Sports
"மீண்டும் களத்திற்குத் திரும்புவேன்" -ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சொன்ன இந்திய நட்சத்திர வீரர் !
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
ஆனால் சமீபத்தில் நடந்துமுடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கே.எல்.ராகுல் சொதப்பிய நிலையில், அணியில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த கேப்டன் பதவி திரும்பபெறப்பட்டது. இந்தியா நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக அந்த அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தினார்.
இதனிடையே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின்போது காயமடைந்தார். உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேறிய போதிலும் அவரால் தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி கூறியுள்ளது.
மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்தும் காயம் காரணமாக அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் களத்திற்குத் திரும்புவேன் என்று கே.எல்.ராகுல் கூறியுள்ளது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு கே.எல்.ராகுலுக்கு அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை முடிந்துள்ளது. இதை மேற்கொண்ட மருத்துவ குழுவினருக்கு நன்றி. மீண்டும் களத்திற்குத் திரும்புவேன்" என்று கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
Also Read
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!