Sports

ராஜஸ்தான், லக்னோவுக்கு வாய்ப்பில்லை.. "Play Off -க்கு முன்னேறும் அணிகள் இதுதான்" - ஹர்பஜன் சிங் கணிப்பு !

உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் மட்டுமே தற்போதைய நிலையில் ஏறக்குறைய அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்த நிலையில், சென்னை அணி அடுத்ததாக இரண்டாம் இடத்தில நீடிக்க லக்னோ அணி மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.

இதற்கு அடுத்ததாக 5 வெற்றிகள் பெற்று ராஜஸ்தான், பெங்களுரு , மும்பை , பஞ்சாப் முதலிய அணிகள் 10 புள்ளிகளுடன் இருக்கின்றன. அதோடு கொல்கத்தா, டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய 3 அணிகளும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் இருக்கின்றன.

இதன் காரணமாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினமான காரியமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் இதுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர் "இது வரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் குஜராத் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என நினைக்கிறேன். அதே போல் சென்னை அணி கண்டிப்பாக இரண்டாவது அணியாக தகுதி பெறும் . அதேபோல மூன்றாவது அனியாக மும்பை வருவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது அவர்கள் புள்ளி பட்டியலில் கீழே இருந்தாலும் கடைசி கட்ட போட்டிகளில் வென்று அவர்கள் தகுதி பெறுவார்கள். ஆனால் ராஜஸ்தான் அணியை கடைசி நேரத்தில் பின்தங்கி தகுதி பெற முடியாமல் போகலாம். பெங்களூரு அணி அவர்களை முந்தி நான்காவது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கிறேன்" எனக் கூறியுள்ளார்.