Sports
மும்பையை புரட்டியெடுத்த பஞ்சாப்.. அர்ஷ்தீப்பின் வேகத்தில் அடங்கிய IPL ஆண்டை மும்பை இந்தியன்ஸ் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இந்த ஐபிஎல் தொடரின் இந்தாண்டு சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்தில் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஷார்ட் 11,பிரபசிம்ரன் 26, அதர்வா தைடே 29 , லிவிங்ஸ்டன் 10 ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க ஒருகட்டத்தில் 83-4 என பஞ்சாப் அணி இந்த போட்டியில் பின்னடைவை சந்தித்தது.
ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் சாம் கர்ரன் மற்றும் ஹார்ப்ரீட் சிங் ஆட்டத்தையே மாற்றினர். அதிலும் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய 16-வது ஓவரில் 31 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி அதிரடி காட்டியது. 41 ரன்களில் ஹார்ப்ரீட் சிங் வெளியேறினாலும் அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா சரவெடியாக வெடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி யாரும் எதிர்ப்பாராத வகையில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் இஷான் கிஷன் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அடுத்து வந்த கிரீன் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக ஆடினர். ரோகித் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின் வந்த சூரியகுமார் யாதவ் அதிரடி அரைசதம் விளாசினார். இறுதிக்கட்டத்தில் 3 ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட அர்ஷிதீப் சிங் வீசிய 18-வது ஓவரில் 9 ரன் மட்டுமே கிடைத்தது. ஆனால் 19-வது ஓவரில் மும்பை 15 ரன் குவிக்க இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் அந்த ஓவரை அபாரமாக வீசிய அர்ஷிதீப் சிங் இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் திலக் வர்மா மற்றும் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியபோது நடு ஸ்டெம்ப்பே உடைந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் அபார வெற்றியை பதிவு செய்தது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!