Sports
தோனி காயத்தின் நிலை என்ன ? பென் ஸ்டோக்ஸ் ஆடுவாரா? மாட்டாரா ? -CSK பயிற்சியாளர் பிளமிங் பதில் !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், ஐபிஎல் மினி ஈழத்தில் சென்னை அணி பென் ஸ்டோக்ஸை 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆனால் சென்னை அணிக்காக பென் ஸ்டோக்ஸ் முதல் இரு ஆட்டங்களில் மட்டுமே களமிறங்கினார். அதன்பின் நடந்த நான்கு ஆட்டங்களை காயம் காரணமாக அவர் தவறவிட்டார். ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னரே அவர் இடது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது அது பெரியதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் இன்னும் ஒரு வாரம் விளையாட மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "பென் ஸ்டோக்ஸ்கு இன்னும் காயம் குணமாகாததால் அவர் ஒரு வாரம் விளையாட மாட்டார். அவர் இல்லாதது அணிக்கு பெரிய பின்னடைவுதான்.. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். குணமாவதற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார்" என்று கூறினார்.
அவரிடம் எம்.எஸ்.தோனியின் காயம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "தோனி தற்போது முழுமையாக உடல் நலமுடன் இருக்கிறார். அவர் எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுப்பார் தான் காயத்தால் பங்களிக்க முடியாது என்று தெரிந்தால், அவரே வெளியே அமர்ந்திருப்பார். அவரைப் பற்றி எந்த கவலையும் இல்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
நாக்கில் நாராசம்.. கேடு கெட்டவர்.. இழிபிறவிகள் - சி.வி.சண்முகம் பேச்சுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!