Sports
விவாகரத்தின் போது ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. சொத்தை காக்க தாயை வைத்து மோசடி செய்த பிரபல கால்பந்து வீரர்!
22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் யாரும் எதிர்பாராத அணியாக இருந்த மொரோக்கோ வலுவான பெல்ஜியம், ஸ்பெயின், போர்த்துக்கல் அணிகளை வீழ்த்தி வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணியாக சாதனை படைத்தது. அரையிறுதியில் தோல்வியைத் தழுவினாலும் அனைத்து தரப்பினரும் அந்த அணியின் ஆட்டத்தை பாராட்டினர். அந்த அளவு அந்த அணியின் போராட்டம் இருந்தது.
அதன்பின்னர் நடைபெற்ற நட்பு ரீதியிலான போட்டியில் 5 முறை உலகக்கோப்பையை வென்ற அணியும் ஃபிபா தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பிரேசில் அணியும் மொரோக்கோ அணியும் மோதின. இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி பிரேசில் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
மொரோக்கோ அணியின் இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக அந்த அணியில் இடம்பெற்றுள்ள உலகின் முன்னணி கால்பந்து வீரர் தடுப்பாட்டக்காரர் அசரப் ஹக்கிமி இருந்து வருகிறார். இவர் பிரபல கால்பந்து கிளப்பான PSG அணியில் மெஸ்ஸி, நெய்மார், எம்பாப்பே ஆகியோருடன் விளையாடி வருகிறார். இந்த அணிக்காக 16 மில்லியன் அமெரிக்க டாலரை வருட ஊதியமாக பெற்றுவருகிறார்.
இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மாடல் ஹிவா அபோக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில், அசரப் ஹக்கிமி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியில் நிலையில், அவரின் மனைவி ஹிவா அபோக் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.
அப்போது ஹிவா அபோக் அசரப் ஹக்கிமியின் சொத்தில் பாதியை ஜீவனாம்சமாக கோரியுள்ளார். இதற்கு ஹக்கிமி ஒப்புதல் அளித்த நிலையில், அவரின் பெயரில் நிலமோ, காரோ, பணமோ எதுவுமே இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர் தான் சம்பாதித்த கோடிக்கணக்கான தொகையை தனது தாயார் பெயரில் பதிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த செய்தி விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!