Sports
இலங்கை வீரருக்கு சமூகவலைதளங்கள் பயன்படுத்த அனுமதி.. பாலியல் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு. பின்னணி என்ன?
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய சாம்பியன் இலங்கை அணி சூப்பர் 12 சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது. இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசி போட்டியில் ஆடிய அந்த அணி அந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
அந்த போட்டி முடிந்ததற்கு பின்னர் இலங்கை அணி நாடு திருப்ப இருந்த நிலையில், பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவை ஆஸ்திரேலிய காவல்துறை அதிரடியாக கைது செய்தது.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 29 வயது பெண்ணுடன் தனுஷ்கா டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகிய நிலையில், அவரை சிட்னியில் உள்ள குடியிருப்பில் தனுஷ்க குணதிலகா சந்தித்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணை குணதிலகா பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் சிட்னி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் தனுஷ்க குணதிலகா நாடு திருப்பயிருந்தபோது கைது செய்யப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழகில் பாலியல் புகாருக்கு ஆளான தனுஷ்க குணதிலகாவுக்கு பிணை வழங்கி ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதற்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்தது. இது தொடர்பாக வெளியான செய்தியில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு 1,50,000 டாலர் பிணை வழங்குவதற்கும் அவர் நாட்டை விட்டு வெளியேறாததை உறுதிசெய்வதற்காக கண்காணிப்பு வளையல் அணிவதற்கும் ஒப்புக்கொண்டதையடுத்துல் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தினமும் காவல்துறையில் கையொப்பமிட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்லக்கூடாது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் டேட்டிங் செயலி உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவருக்கு இரவு நேரத்தில் வெளியே செல்லவும், சமூக வலைதளங்கள் பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் அவர் நாட்டை விட்டு வெளியே செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தண்டனை பெற்றால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!