Sports
அமெரிக்காவிலும் கால் பதித்த IPL அணிகள்.. CSK நிர்வாகம் வாங்கிய அணியின் பெயர் என்ன தெரியுமா ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐ.பி.எல்.லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும், ஐபிஎல் பாணியிலான தொடரை ஆரம்பித்துள்ளது. 6 அணிகள் கொண்ட இந்த தொடரில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், போர்ட் எலிசபத் அணியை சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேபிடல்ஸ் அணியும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் வாங்கியுள்ளது.இந்த தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் ஐபிஎல் அணிகள் களமிறங்கியுள்ளன. ஜுலை மாதம் தொடங்கவுள்ள அமெரிக்க லீக் தொடரில் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், லாஞ் ஏஞ்சல்ஸ் அணியை வாங்கியிருந்தது.
தற்போது அத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கியுள்ளன.
இந்த நிலையில், இந்த தொடருக்கான ஈழத்தில் CSK சார்பில் அணி காசி விஸ்வநாதன், ஸ்டீபன் பிளமிங் மற்றும் CSK முன்னாள் வீரர் அல்பி மார்கெல் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை CSK ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்த தொடரில் CSK நிர்வாகம் வாங்கியுள்ள டெக்சாஸ் அணிக்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
Also Read
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மனிதாபிமானமற்று செயல்படும் பா.ஜ.க அரசு : பெண் மருத்துவர் மரணம் - ராகுல் காந்தி விமர்சனம்!