Sports
"இப்போதும் சிறந்த வீரர்தான்".. கே.எல்.ராகுலுக்கு ஆதரவு கொடுக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில், 20, ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 17,1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த மோசமான ஆட்டத்தால் இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
அதோடு கே.எல்.ராகுல் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி அங்கு ரன்கள் குவித்து அணிக்குத் திரும்பவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். இப்படி முன்னாள் வீரர்களும், இவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்போதும் கே.எல்.ராகுல் சிறந்த வீரர்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.
இது குறித்துக் கூறியுள்ள கவுதம் கம்பீர், "இந்திய அணியிலிருந்து கே.எல்.ராகுலை நீக்கக் கூடாது. ஒவ்வொரு வீரருக்கும் தங்கள் வாழ்க்கையில் சில இடங்களில் ரன்கள் சேர்க்கத் தடுமாறுவார்கள். ரோகித் சர்மாவையே எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அவர் எப்படி விளையாடினார். இப்போது அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இப்போதும் ராகுல் சிறந்த வீரர்தான். அவர் ரன் சேர்த்துள்ளதை நாம் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!