Sports
ஜேமிஸனைத் தொடர்ந்து வெளியேறுகிறாரா பென் ஸ்டோக்ஸ் ? -வெளியான தகவலால் CSK ரசிகர்கள் அதிர்ச்சி !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பி.சி.சிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் காரணமாக இதில் பங்கேற்க உலக நாடுகளின் வீரர்கள் தொடர்ந்து அணிவகுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணி கோப்பையைக் கைப்பற்றியது. எனினும் ஐபிஎல் தொடரில் வெற்றிகரணமாக அணிகளாக சென்னை மற்றும் மும்பை அணிகள் வளம் வருகிறது.
அதிலும் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு முறை மட்டுமே அரையிறுதி,பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற தவறியுள்ளது. அந்த அளவுக்கு சென்னை அணி வலிமை வாய்ந்த அணியாக திகழ்கிறது.இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே மாதம் 28ம் தேதி நடக்கவுள்ளது.
இதற்கு முன்னதாக ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஆல் ரௌண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனை சென்னை அணியின் ரசிகர்கள் வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து வீரர்கள் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் இருக்கமாட்டார்கள் என வெளியான செய்தி ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரபலமான ஆஷஸ் தொடர் தொடர் ஜூன் மாதம் 16ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கு பயிற்சி எடுக்கும்விதமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அயர்லாந்து அணி உடன் இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது. மேலும், மே மாதம் 18 ஆம் தேதி இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதனால் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் விதமாக கவுண்டி போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கவேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக முக்கிய இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் முடியும் முன்னர் நாட்டுக்கு திரும்பவேண்டியது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!