Sports
40 வயதில் ICC டெஸ்ட் தரவரிசையில் முதலிடம்.. உலகையே திரும்பி பார்க்கவைத்த இங்கிலாந்து ஜாம்பவான் !
இங்கிலாந்து அணி நியூஸிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெரும் சாதனையை படைத்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார். அவரின் இந்த அபார பந்துவீச்சு இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது.
அதன்பின்னர் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்கள் 30 வயதுக்கு மேல் ஓய்வை அறிவித்து வரும் நிலையில், தற்போது 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது வரை 178 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 682 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே உலகளவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக திகழும் அவர், விரைவில் ஷேன் வார்னேவை (708),பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து 2-வது பந்துவீச்சளராக மாற வாய்ப்புள்ளது. இந்த பட்டியலில் 800 விக்கெட்டுகளுடன் இலங்கையின் முத்தையா முரளிதரன் முதலிடத்திலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் "என்னால் தொடர்ந்து விளையாட முடியும் எனத் தோன்றும் வரை நான் விளையாடுவேன். ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரராக நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றுவிட்டதாக நான் எண்ணவில்லை" என்று கூறியுள்ளார். இதன் மூலம் தொடர்ந்து அவர் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!