Sports
என்னது கே.எல்.ராகுலுக்கு அடுத்த போட்டியிலும் வாய்ப்பா ? -டிராவிட்டின் கருத்தால் ரசிகர்கள் காட்டம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில், 20, ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 17,1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இவரை ரசிகர்கள் கடுமையாக விமரசித்து வருகின்றனர்.
அவருக்கு பதில் சமீப காலமாக சிறப்பாக ஆடிவரும் கில், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கே.எல்.ராகுலுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அவர், கே.எல்.ராகுலுக்கு இது இக்கட்டான காலகட்டம். இப்போது நாம் அவருக்கு துணையாக இருப்பதுதான் சிறந்த முடிவு . பலரும் இதேபோல, தடுமாற்றமான தருணத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள். கே.எல்.ராகுலுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம். அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும்’’ எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அடுத்த போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது தெரிகிறது.
Also Read
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!
-
‘துரோகியே வெளியில் போ‘... தலைதெறிக்க ஓடும் த.வெ.க. வேட்பாளர்கள் : முரசொலி தலையங்கம்!
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?