Sports
"2040ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடராக IPL மாறும்"-இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு!
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஆரம்பத்தில் லாபம் கிடைக்குமா? என தயங்கி ஐபிஎல்லில் முதலீடு செய்த அணி உரிமையாளர்கள் இப்போது போட்டதை விட பல மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதோடு இதில் முதலீடு செய்யும் ஸ்பான்சர்களும் வணிக ரீதியாக லாபம் அடைந்து வருகின்றனர். ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான ஐபிஎல் பாணியில் பெண்களுக்கான ஐபிஎல் தொடர் நடத்தப்படவுள்ளதாக பிசிசிஐ அமைப்பு அறிவித்தது. 5 அணிகள் கலந்து கொள்ளும் இந்ததொடரின் ஒளிபரப்பு உரிமையை வயகாம் 18 நிறுவனம் கைப்பற்றியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு போட்டிகளை ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமையை வயகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் மகளிர் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஒரு ஆட்டத்துக்கு ரூ. 7.09 கோடியை பிசிசிஐ-க்கு, வயகாம் 18 நிறுவனம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகளவில் அதிக மதிப்புடைய பெண்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடராக மகளிர் ஐபிஎல் மாறியுள்ளது.
இந்த நிலையில் 2040-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் நடக்கும் NFL ரக்பி பின்னுக்கு தள்ளி தாண்டி உலகின் மிக்பெரிய விளையாட்டு தொடராக ஐபிஎல் இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியப் பொருளாதாரம் 2040-ல் அமெரிக்காவின் அளவுக்கு சமமான நிலையை அடையும் . அப்போது ஐபிஎல்லின் மதிப்பு இன்று இருப்பதை விட ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். இதனால் NFL ரக்பி பின்னுக்கு தள்ளி தாண்டி உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடராக இருக்கும்.
பிசிசிஐ பெண்கள் ஐபிஎல் தொடரை தொடங்கியுள்ளது. இது பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இது மகளிர் கிரிக்கெட்டை அதன் சொந்தக் காலில் நிற்க வழிவகை செய்யும். மேலும், பெண்களுக்கு திறமை, பொருளாதார ரீதியாக அதிக வாய்ப்புகளை வழங்கும். உண்மையில் இது கிரிக்கெட் வளர்ச்சிக்கு முக்கியமானது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பீகார் : 121 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் - பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள்!
-
தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
-
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!