Sports

ஆசிய,காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம்.. இறுதிக்காலத்தில் காவலாளியாக பணிபுரிந்து இறந்த குத்துசண்டை வீரர் !

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திய அணியின் மூத்த குத்துசண்டை வீரர் பிர்ஜு ஷா 90களின் மத்தியில் உலகளவில் புகழ்பெற்ற குத்துசண்டை வீரராக திகழ்ந்தார். ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற அவர் உலகளவில் 7-வது இடத்தில் திகழ்ந்தார்.

ஆனால், அத்தகைய ஜாம்பவான் வீரர் தன்னுடைய ஓய்வுக்கு பிறகு கடும் நிதிச்சிக்கலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்போ அல்லது அரசாங்கமோ அவருக்கு எந்த வித உதவியும் செய்யாத நிலையில், தன் இறுதிக்காலத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக அவரின் குழந்தைகள் படிப்பை இடையிலேயே நிறுத்தியுள்ளனர். தனக்கு உதவுமாறு குத்துசண்டை கூட்டமைப்புக்கு அவர் கோரிக்கை விடுத்தும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தனது 50-வது வயதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரின் உயிர் பிரிந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஒரு காலத்தில் உலகின் டாப் 7 குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராக திகழ்ந்த பிர்ஜு ஷாவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் அவருக்கு உதவாத கால்பந்து கூட்டமைப்புக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிர்ஜு ஷாவின் சாதனைகள் :

ஆசிய விளையாட்டு (1994) வெண்கலப் பதக்கம்

காமன்வெல்த் விளையாட்டுகள் (1994) வெண்கலப் பதக்கம்

ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் (1993) வெண்கலப் பதக்கம்

ஒய்எம்சிஏ சர்வதேச சாம்பியன்ஷிப் (1996) தங்கப் பதக்கம்

தேசிய விளையாட்டு (1993) தங்கம்

தேசிய சாம்பியன்ஷிப் (1995, 1996) தங்கம்

ஒய்எம்சிஏ சாம்பியன்ஷிப் (1996) தங்கம்

தேசிய விளையாட்டு (1994) தங்கம்

தேசிய சாம்பியன்ஷிப் (1998) தங்கம்

தேசிய விளையாட்டுகள் (1999) வெள்ளிப் பதக்கம்

தேசிய விளையாட்டுகள் (1997) வெண்கலப் பதக்கம்

கிழக்கிந்திய ஓபன் சாம்பியன்ஷிப் (2000) வெண்கலப் பதக்கம்

Also Read: மீண்டும் இந்திய அணியில் இடம் ? - ஐபிஎல் தொடர் குறித்து தமிழக வீரர் நடராஜன் கூறியது என்ன ?