Sports
"இட ஒதுக்கீடு இருந்தால் தான் இந்திய அணி தேறும்".. கன்னட நடிகரின் கோரிக்கையால் பரபரப்பு!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாகத் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த தொடரிலும் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் இடம் பெறாதது சர்ச்சையானது. இந்த தொடரை அடுத்து வங்கதேச தொடரிலும் இவர்கள் இருவர் இடம் பெறவில்லை.
இதனால் பிசிசிஐ-ஐ பலர் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் #CASTEIST_BCCI வைரலாக்கினர். இதையடுத்து தற்போது வங்கதேசத் தொடரிலும் இந்திய அணி படுதோல்வியை அடைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணையில் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என கன்னட நடிகர் சேத்தன் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், "கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இருப்பது போன்று கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
அப்போதுதான் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டால் அவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்ட பிறகே கறுப்பின வீரர்கள் அதிகம் இடம் பெற்று வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். பரவலாக இந்திய அணியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகர்களே வெளிப்படையாக பேசி வருவது பிசிசிஐ-க்கு நெறுக்கடியை கொடுத்துள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!