Sports
சீறிய மெஸ்ஸி,, பணிந்த ஆஸ்திரேலியா.. அசத்தலான ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா !
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதன் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதனைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி சார்பில் அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அணிக்காக முதல் கோல் அடித்தார்.
ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய தடுப்பு வீரர்களை தாண்டி மெஸ்ஸி அடித்த இந்த கோல் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றனர். அதிலும் மெஸ்ஸி அடுத்தடுத்து வாய்ப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருந்தார்.
பின்னர் இரண்டாம் பாதியில் ஆஸ்திரேலிய அணியின் கோல் கீப்பர் செய்த தவறை பயன்படுத்தி அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரஸ் தனது அணிக்காக மற்றொரு கோலை அடித்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய தட்டுப்பாட்ட வீரர்களை தாண்டி மெஸ்ஸி பந்தை ட்ரிப்ளிங் செய்து எடுத்துவந்து அரங்கத்தையே அதிரவைத்தது.
இதனிடையே 76-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்து அர்ஜென்டினா வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் தலையில் பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கோலாக மாறியது. இது ஆட்டத்தை உச்சகட்ட பரபரப்புக்கு உள்ளாக்கியது. இறுதியில் கூடுதல் நேரத்தின் போது ஆட்டம் முடிய சில நொடிகளே இருந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்தை அர்ஜென்டினா கோல் கீப்பர் மாட்டினெஸ் அபாரமாக தடுத்து அணியை கைப்பற்றினார். இறுதியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் மெஸ்ஸியின் ஆட்டம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. ஒரு கோல் அடித்த அவர் சக வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளையும் ஏற்படுத்தினார். அதிலும் லடாரோ மார்ட்டினஸ்க்கு மட்டும் 2 எளியவாய்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அதனை அவர் கோலாக்க தவறினார். அடுத்ததாக வரும் 10-ம் தேதி நடக்கும் காலிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி நெதர்லாந்து அணியை சந்திக்கவுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!