Sports
India vs NewZealand தொடர்.. இந்திய அணியை கண்டு எங்களுக்கு பயம் இல்லை.. கேன் வில்லியம்சன் ஓபன் டாக்!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாக தோல்வியடைந்தது.இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை டி20 போட்டிகளில் மட்டும் மீண்டும் களமிறக்கலாமா என BCCI ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த அளவிற்கு இந்திய அணியின் தோல்வி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் டி20 உலக கோப்பையை அடுத்து நியூசிலாந்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ஒரு நாள் போட்டிக்கு தவான் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நியூசிலாந்து அணியின் வீரர்கள் பட்டியலும் நேற்று அறிவிக்கப்பட்டது. மீண்டும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் நீட்டிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடர் குறித்துப் பேசிய கேன் வில்லியம்சன், "இந்திய அணியில் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் இருக்கின்றனர். இருந்தாலும் எல்லோராலும் எல்லாவற்றையும் செய்ய முடியாது என்பதுதான் இயற்கை. டிரென்ட் போல் மிண்டும் நியூசிலாந்து அணியில் பார்ப்போம்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!