Sports
வரலாற்றில் முதல் வீரர்.. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் உலகசாதனை படைத்த விராட் கோலி !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் சிட்னி மைதானத்தில் நேற்று மோதின. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கும் முன்னேறியுள்ளது. அதைத் தொடர்ந்து இன்று இந்தியா இங்கிலாந்து அணிகள் அடிலைட்டில் ஆடி வருகின்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வலுவான தொடக்க கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு பவுண்டரியை மட்டும் விரட்டிய ராகுல் 5 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் களத்தில் நின்ற கேப்டன் ரோஹித் சர்மா 27 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர்வந்த இந்திய அணியின் நாயகம் சூர்யகுமாரும் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தை கொண்டு சென்றனர். பின்னர் கோலி அவ்வப்போது பௌண்டரிகள் அடித்து அரைசதத்தை கடந்தார். இது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவர் அடிக்கும் 200 அரைசதமாக அமைந்தது. மேலும் சர்வேதேச டி20 போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
அரைசதமடித்த கையோடு கோலி ஆட்டமிழக்க இறுதியில் ருத்திர தாண்டவம் ஆடிய ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதனால் முதல் 10 ஓவரில் தடுமாறிய இந்திய அணி அடுத்த 10 ஓவரில் 106 ரன்கள் குவித்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி ஆடிவருகிறது.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!