Sports
"இந்த இந்திய வீரரின் ஆட்டத்தை அடக்கியே தீருவோம்" - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சூளுரை !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இதன் காரணமாக விராட் கோலியின் மீதும் சூரியகுமாரின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 51 ரன்கள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 40 பந்துகளில் 68 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்கும் சூரியகுமார் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி வரும் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் நிலையில், சூரியகுமார் குறித்து இங்கிலாந்து அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "இந்த தொடரில் சூரியகுமார் அதிரடியாக ஆடிவருகிறார். அவருக்கு எதிரான திட்டங்கள் வகுத்துள்ளோம். இதனை வைத்து பிரமாதமாக ஆடி வரும் சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம். ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை என்பதால் குறைத்து மதிப்பிட முடியாது" என அவர் கூறியுள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!