Sports
"அரையிறுதிக்கு இந்த அணிகள்தான் முன்னேறும்,, அப்போ இந்தியா ?" - உலகக்கோப்பை குறித்து உத்தப்பா கருத்து !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை நேற்று ஆக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தகுதி சுற்றில் இலங்கை,அயர்லாந்து, நெதர்லாந்து, ஜிம்பாப்பே அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் அணி தகுதி சுற்றில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறியது.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் 12 பிரிவின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை வீழ்த்தியது.
இந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல்வேறு முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெறும் என சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அணிகள் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "நான் சொல்வது இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம், ஆனால் என்னை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு அணிகளே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!