Sports

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு.. IPL தொடரில் ஆடிய பிரபல சர்வதேச வீரர் அதிரடி கைது !

2016-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, நேபாள அணியின் கேப்டனாக இருந்தவர் சந்தீப் லமிச்சானே. லெக் ஸ்பின்னரான அவர், அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் பெரும் கவனத்தை ஈர்த்தார்.

அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடந்த லீக் போட்டிகளில் பங்கேற்று அங்கும் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரிலும் அவர் இடம்பெற்றார். தனது சிறப்பான செயல்பாடு காரணமாக நேபாள அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் மீது காவல்நிலையத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியுள்ளார்.அவர் கூறியுள்ள புகாரில், நான் அவரின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன் முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். பின்னர் அவரை சந்தித்த நிலையில், 2 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சிறுமிக்கு உடல்பரிசோதனை செய்யப்பட்டதில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது நிரூபிக்கப்பட்டதாக நேபாள போலிஸார் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடப்பட்டு வந்த நிலையில், சந்தீப் லமிச்சானேவை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: "தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கற்று கொள்ளுங்கள்" -இளம் வீரருக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !