விளையாட்டு

"தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கற்று கொள்ளுங்கள்" -இளம் வீரருக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !

ரிஷப் பண்ட் தனது சர்வதேச வாழ்க்கையில் இதேபோன்ற கட்டத்தை கடந்து வந்த கார்த்திக்கிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

"தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கற்று கொள்ளுங்கள்" -இளம் வீரருக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

"தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கற்று கொள்ளுங்கள்" -இளம் வீரருக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டார். மேலும், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணியின் பிளேயிங் லெவவில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார். அதேநேரம் ரிஷப் பண்ட் இரண்டாம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணி கருதுகிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

"தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கற்று கொள்ளுங்கள்" -இளம் வீரருக்கு அறிவுரை வழங்கிய முன்னாள் வீரர் !

இந்த நிலையில், இந்திய அணியில் ரிஷப் பண்ட்யின் நிலை குறித்து முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒவ்வொருவருக்கும் தகுந்த ரோலை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறக்கியிருக்கும் இந்திய அணி இன்னும் ரிஷப் பண்டிற்கான ரோலை உறுதி செய்யவில்லை. தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு வருவதால், தொடர்ந்து அவருக்கே முதல் வாய்ப்பை இந்திய அணி வழங்குகிறது. ரிஷப் பண்ட் தனது சர்வதேச வாழ்க்கையில் இதேபோன்ற கட்டத்தை கடந்து வந்த கார்த்திக்கிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

பண்ட் அதிக தூரம் செல்ல வேண்டியதில்லை, கார்த்திக்கை நம்பி அவரை அணிக்குள் ஏற்றுக்கொள்ள 15 வருடங்கள் ஆனது. ரிஷப் பண்டை போலவே தினேஷ் கார்த்திக்கும் அதே திறமை இருந்தது. அணி அவரை மீண்டும் கொண்டு வந்தது. நீங்கள் சிறப்பாக விளையாடினால் அணியில் இருப்பீர்கள், சரியாக செயல்படாமல் போனால் அணி உங்களை ஒரு கட்டத்தில் இழக்க நேரிடும்' என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories