Sports
"இப்படியே ஆடினால் அணியை விட்டு தூக்கிவிடுவார்கள்"- இந்திய அணியின் முக்கிய வீரரை எச்சரித்த கவாஸ்கர் !
துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் பின்னர் ஆடிய வீரர்கள் அபாரமாக ஆடியதால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.
அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது. இந்த இரு போட்டியில் கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "டி.20 உலகக்கோப்பை தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான தொடரில் மிக சிறப்பாக விளையாடினார், எனவே துவக்க வீரர்களுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவுகிறது.
எனவே கே.எல் ராகுல் தொடர்ந்து சொதப்பினால் நிச்சயம் அவர் இந்திய அணியில் இருந்து விரைவாக நீக்கப்படுவார், இது போன்றே விளையாடினால் இன்னும் 2-3 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியும் கே.எல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், அதிலும் சொதப்பினால் நிச்சயமாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !